பேரூந்து உரிமையாளர்களுக்கான மானியம்

(UTV | கொழும்பு) –  தனியார் பேரூந்து உரிமையாளர்களிடம் பெற்றுக்கொள்ளப்படும் சில கட்டணங்களை 2020 மார்ச் முதல் அமுலாகும் வகையில் அறவிடாமல் இருப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனா தொற்றுக்கு மத்தியில் மாகாணங்களுக்கிடையிலான பேரூந்து சேவைகளை தொடர்ச்சியாக முன்னெடுக்கும் தனியார் பேரூந்து உரிமையாளர்களுக்கான நிவாரணத்தை வழங்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில்,
• அனுமதிப்பத்திரம் புதுப்பித்தலுக்கான கட்டணம்
• தாமதக் கட்டணம்
• விலைமனுக் கோரல் கட்டணம்
• லொக் பத்திரக் கட்டணம்
• உள்நுழைதல் கட்டணம்
• அதிவேக நெடுஞ்சாலையின் தற்காலிக அனுமதிப்பத்திரக் கட்டணம் என்பனவற்றை அறவிடாமல் இருப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

எவ்வாறாயினும், இத்தொற்று மீண்டும் பரவுவதால் பேரூந்துப் போக்குவரத்தாளர்கள் மேலும் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளதால், பயணிகள் போக்குவரத்துச் சேவையை தரமாகவும் வினைத்திறனுடனும் வழங்குமுகமாக அவர்களுக்கு மானியங்கள் வழங்க வேண்டுமென இனங்காணப்பட்டுள்ளது. அதற்கமைய, போக்குவரத்து அமைச்சர் சமர்ப்பித்த யோசனையை கருத்தில் கொண்டு, இவ்வருட இறுதி வரைக்கும் தொடர்ந்து இம்மானியங்களை பேரூந்துப் போக்குவரத்தாளர்களுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *