(UTV | கொழும்பு) – இன்று(12) காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் தொடர்பான இரண்டாம் வாசிப்பு மற்றும் குழுநிலை விவாதம் இன்று (12) இடம்பெறவுள்ளது.
அத்துடன், மதியபோசன இடைவேளை இன்றி முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை இன்றைய நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்கட்சியினரால் முன்வைக்கப்படும் சபை ஒத்திவைப்பு பிரேரணை தொடர்பான விவாதம் நாளை(13) முற்பகல் 10.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணிவரை இடம்பெறும்.
இதேவேளை, 2021 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் எதிர்வரும் 17 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், அதனை 19 நாட்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්