வீரர்களுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தும் நடவடிக்கை இல்லை

(UTV | ஜப்பான்) –  அடுத்த வருடம் நடைபெறவுள்ள 2020 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளுக்காக டொக்கியோவுக்கு வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் வீரர்களுக்கு ஜப்பானின் 14 நாள் தனிமைப்படுத்தல் நடவடிக்கை எடுக்கபட மாட்டாது என தெரிவிக்கப்படுகின்றன.

ஆனால் விளையாட்டு வீரர்களும் குழுவினரும் ஜப்பானுக்கு வருகை தருவதற்கு முன்னர் 72 மணி நேரத்திற்குள் கொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கபப்டும் என தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, தொற்றுநோய்களின் நிலையைப் பொறுத்து அடுத்த ஆண்டு வெளிநாட்டு பார்வையாளர்கள் குறித்து முடிவு எடுக்கப்படும் என டோக்கியோ 2020 தலைமை நிர்வாக அதிகாரி தோஷிரோ முட்டோ (Toshiro Muto) தெரிவித்துள்ளார்

2020 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளை 2021 ஜூலை 23 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 8 வரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *