(UTV | கொழும்பு) – மேன்முறையீடு செய்த பட்டதாரிகளின் நியமனப் பட்டியல் இணையத்தில் வெளியிடப்பட்டதாக அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சு அறிவித்துள்ளது.
அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனின் தலைமையில், அமைச்சின் ஆலோசனைக்குழு பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று கூடியது.
இதன்போது குறித்த பெயர்ப்பட்டியலை இணையதளத்தில் வெளியிடுவதாக அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரட்ணசிறி தெரிவித்துள்ளார்.
ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றில் அங்கத்துவம் பெற்றிருப்பதால் நியமனங்களை இழந்த பட்டதாரிகளின் மேன்முறையீடுகளை பரிசீலித்ததாக செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.
இதற்கமைய, ஒவ்வொரு மாவட்டத்திலும் மேன்முறையீடு செய்திருந்த 3 ஆயிரத்து 902 பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්