கொழும்பு கிங்ஸ் அணியை வீழ்த்தி காலி அபார வெற்றி

(UTV | கொழும்பு) –  கொழும்பு கிங்ஸ் அணியை 8 விக்கெட்டுகளினால் வீழ்த்தி, காலி கிளாடியேட்டர்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

லங்கா பிரீமியர் லீக் தொடரின் 14 ஆவது போட்டி நேற்று ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான கொழும்பு கிங்ஸ் மற்றும் பானுக ராஜபக்ஷ தலைமையிலான காலி கிளாடியேட்டர்ஸ் அணிகளுக்கிடையே ஆரம்பமானது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ஓட்டங்களை பெற்றது.

172 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய காலி கிளாடியேட்டர்ஸ் அணியானது 17.3 ஓவர்களை மாத்திரம் எதிர்கொண்டு 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ஓட்டங்களை பெற்று வெற்றியிலக்கை கடந்தது.

இந்த வெற்றியின் மூலம் காலி அணி தொடரில் முதல் வெற்றியை பதிவுசெய்ததுடன், 2 புள்ளிகளை பெற்று பட்டியலில் நான்காவது இடத்துக்கு முன்னேறியது.

போட்டியின் ஆட்டநாயகனாக ஐந்து விக்கெட்டுகளை அள்ளிய மொஹமட் அமீர் தெரிவானார்.

இதேவேளை நேற்றிரவு இடம்பெற்ற லங்கா பிரீமியர் லீக் தொடரின் 15 ஆவது போட்டி யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் மற்றும் தம்புள்ளை வைக்கிங்ஸ் அணிகளுக்கிடையே இடம்பெற்றது.

இப் போட்டியில் தம்புள்ளை அணி 7 ஓவர்ளுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து 42 ஓட்டங்களை குவித்திருந்த வேளையில் மழை குறுக்கிட்டமையினால் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது.

அதன் பின்னர் தொடர்ந்தும் மழை இடைவிடாது பெய்த காரணத்தினால் போட்டி கைவிடப்பட்டது. இதன் காரணமாக இவ்விரு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு புள்ளிகள் வழங்கப்பட்டன.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *