(UTV | கொழும்பு) – பொதிகள் மற்றும் பொருட்களை வீடுகளுக்கே விநியோகிக்கும் நடவடிக்கை தபால் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
கணினி மயப்படுத்தப்பட்ட தபால் அலுவலகங்கள் ஊடாக இந்த சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதன்போது, பொருட்களை பெற்றுக்கொண்டதன் பின்னர் பணத்தை செலுத்தும் வகையில் இந்த சேவையை அறிமுகப்படுத்தவுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இதன் முதற்கட்டமாக 50,000 ரூபா வரையான பெறுதியுடைய பொருட்களை வீடுகளில் பெற்றுக்கொள்வதற்காக சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதுடன்,
தற்போது பணக்கொடுக்கல் வாங்கல் மாத்திரமே முன்னெடுக்கப்படவுள்ளதுடன் எதிர்வரும் காலத்தில் கடன் அட்டைகளுக்கும் பொருட்களை விநியோகிக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக தபால் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්