(UTV | கொழும்பு) – கடந்த 24 மணித்தியால காலப்பகுதிக்குள் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் மேலும் 253 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதன்படி கடந்த மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 1824 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த காலப்பகுதிக்குள் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 65 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්