பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சும் மாம்பழங்களை அனுப்பும் அறிக்கையும்

(UTV | கொழும்பு) –  பாகிஸ்தான் அந்நாட்டு மாம்பழங்களை வெளிநாட்டு பிரமுகர்களுக்கு அன்பளிப்பாக வழங்கியது தொடர்பாக சில ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக, பின்வருவனவற்றை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜாஹித் ஹபீஸ் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

“கடந்த வாரம் பாகிஸ்தான் அதன் மாம்பழங்களை வெளிநாட்டு பிரமுகர்களுக்கு பரிசாக அனுப்பியது தொடர்பான சில ஊடக அறிக்கைகளை நாங்கள் பார்த்தோம். இந்த அறிக்கைகள் தவறானவை. மேலும் நாம் அவ்வறிக்கைகளை நிராகரிக்கின்றோம்.

ஒரு சில இந்திய ஊடகங்கள் தவறான மற்றும் பொறுப்பற்ற இவ்வறிக்கைகளை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு ஆண்டும், பாகிஸ்தான் ஜனாதிபதி, நல்லெண்ண நோக்கமாகவும், இராஜதந்திர முயற்சிகளை ஊக்குவிப்பதன் நோக்கமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாடுகளுக்கு உயர்தர மாம்பழங்களை அன்பளிப்பாக வழங்குவது வழக்கம். 2018-2019 ம் ஆண்டு 78 மில்லியன் டொலர்களாக இருந்த மாம்பழ ஏற்றுமதி 2019-2020 ம் ஆண்டு 104 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தனிமைப்படுத்தல் விதிமுறைகள், சுகாதார , சர்வதேச உணவுச் சான்றிதழ் அங்கீகாரம் மற்றும் விமானங்களின் தன்மை ஆகியவற்றை கருத்தில் கொண்டே வெளியுறவு அமைச்சகத்தால் நாடுகள் தெரிவு செய்யப்படுகின்றன . மேலும், கடந்த ஆண்டு முதல், கொவிட் -19 தொடர்பான நிபந்தனைகளும் இப் பரிசீலனையின் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டைப் பொறுத்தவரை, இதுவரை எந்த நாட்டுக்கும் மாம்பழங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட வில்லை. மேலும் , இது இன்னும் திட்டமிடல் நிலையிலேயே உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *