புத்தளம் – அருவக்காரு பிரதேசத்தில் குப்பைகளை கொட்டுவதற்கான அமைச்சரவை அனுமதி

(UDHAYAM, COLOMBO) – புத்தளம் – அருவக்காரு பிரதேசத்தில் குப்பைகளை கொட்டுவதற்கான அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

இதற்கு முன்னர் எழுவன்குளம் – கனேவாடிய பிரதேசத்தில் குப்பை கொட்ட தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும் அது பொருத்தமற்றது என சுழல் பாதுகாப்பு திணைக்களம் தீர்மானித்திருந்தது.

இதனையடுத்து, அருவக்காரு பிரதேசத்தை தெரிவு செய்து குப்பையை கொட்ட அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றிருப்பதாக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சர் லசந்த அலகியவன்ன எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

இதற்கிடையில், மீதொடமுல்ல குப்பைகூளம் அமைந்துள்ள இடத்தை இராணுவத்தினரின் உதவியுடன் 5 மாதங்களில், நகர வனாந்தர பூங்காவாக மாற்றவும் அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *