பலதார திருமணத்திற்கு முற்றுப்புள்ளி

(UTV | கொழும்பு) –  ‘ஒரு நாடு ஒரே சட்டம்’ ஆணைக்குழுவின் அறிக்கை வரும் வரை முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதில்லை என அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் திங்கட்கிழமை (21) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நீதி அமைச்சர் அலி சப்ரி கூறுகையில், காதி நீதிமன்றங்கள் தடையை தடை செய்வதையும், முஸ்லிம் ஆண்களுக்கு பலதார மணம் செய்யும் நடைமுறையை முடிவுக்கு கொண்டு வருவதையும் முஸ்லிம் சமூகம் எதிர்ப்பதாக தெரிவித்தார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அமைச்சர்களான சரத் வீரசேகர, உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, ஆணைக்குழு அறிக்கை கிடைக்கும் வரை ஒரே நாட்டில் ஒரே சட்டம் திருத்தப்படுவதை நிறுத்த வேண்டும் என்றார்.

ஒவ்வொரு சமூகத்திற்கும் தனியான சட்டங்கள் உருவாக்கப்படுவதை தாம் எதிர்ப்பதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்துவமான கலாச்சார பாரம்பரியம் இருப்பதால் சட்டம் ஒரு பிரச்சினை அல்ல என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

“பிரான்சில் புர்கா தடை செய்யப்பட்ட போது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 30 வீதமான பெண்கள் மாத்திரமே புர்காவை விரும்புகின்றனர், இலங்கையில் 10 வீதமானவர்கள் அதனை அணிவதில்லை” என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *