தீர்வின்றி தொடரும் போராட்டங்கள்

(UDHAYAM, COLOMBO) – கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுடைய போராட்டம் இன்று 80 வது நாளாகவும் தொடர்வதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

குறித்த கவனயீர்ப்பு போராட்டம் கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் இடம்பெறுகின்றது.

கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் இன்று வரை தீர்வுகள் எதுவும் இன்றி தொடர்வதாக போராட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி கமம் மற்றும்  ஜொனிக் குடியிருப்பு பிரதேச மக்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் இன்று 50வது நாளாகவும் தொடர்கிறது.

தமது குடியிருப்பு காணிக்கான ஆவணம் செய்தல், அடிப்படை வசதிகள் மற்றும் நிரந்தர வீட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் இடம்பெறுகின்றது.

இதனிடையே, பூநகரி இரணைதீவு மக்களின் போராட்டமும் இன்று 10 வது நாளாகவும் தொடர்கிறது.

தமது சொந்த இடத்திற்கு செல்வதற்கான அனுமதியை கோரியே குறித்த போராட்டம் கடந்த முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *