வடகொரியா சர்ச்சைக்குரிய செயல்பாடுகளில் ஈடுப்படுவதை தவிர்க்க வேண்டும்

(UDHAYAM, COLOMBO) – தென்கொரியாவின் புதிய ஜனாதிபதியாக மூன் ஜே-இன் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், இன்று முதல் முதலாக சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் உடன் உரையாடியுள்ளார்.

வடகொரியா சர்ச்சைக்குரிய செயல்பாடுகளில் ஈடுப்படுவதை தவிர்க்க வேண்டும் என இதன் போது புதிய ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

தென்கொரியாவில் அமெரிக்காவின் ஏவுகணை தடுப்பு முறைமை பொருத்துவது குறித்து சீனா முன்னர் தமது எதிர்ப்பினை தெரிவித்து வந்தது.

எவ்வாறாயினும் இன்றைய சந்திப்பின் போது தென்கொரியா, சீனாவிற்கு தற்போதைய நிலை குறித்து விளக்கம் ஒன்றை அளித்துள்ளதாக தென்கொரிய ஜனாதிபதியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஏவுகணை தடுப்பு முறைமை தென்கொரியாவில் பொருத்தப்படுவதன் மூலம் அந்த பிராந்தியத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என சீனா தொடர்ந்தும் வலியுறுத்தி வந்துள்ளது.

எவ்வாறாயினும் வடகொரிய ஏவுகணை மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுத பரீட்சைகளுக்கு அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை, பொருளாதார தடையை வடகொரியாவிற்கு எதிராக அமுல்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், தென்கொரியாவின் புதிய ஜனாதிபதி, வடகொரியாவுடன் நேரடியாக தொடர்பினை மேற்கொண்டு சமாதானத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளுக்கு முக்கியதுவம் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதுதவிர, ஜனாதிபதி பதவியை ஏற்றுள்ள தாம் பிராந்திய சமாதானத்திற்கு முன்னுரிமை வழங்கி செயல்படவுள்ளதாகவும் உறுதியளித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *