(UTV | கொழும்பு) – எரிபொருள் விலை சூத்திரம் மாதத்திற்கு ஒருமுறை நடைமுறைப்படுத்தப்படும் எனவும், இது தொடர்பான யோசனை திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நவம்பர் 19 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் 50 ஆவது ஆண்டு விழாவின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.