நாட்டில் தொலைபேசி கடத்தல் தீவிரமடைந்துள்ளது

(UTV | கொழும்பு) – நாட்டில் தொலைபேசி கடத்தல் தீவிரமடைந்துள்ளது

நாட்டில் சட்டவிரோதமான முறையில் தொலைபேசிகள் கடத்தல் இடம்பெற்று வருவதாக கையடக்க தொலைபேசி smart phones இறக்குமதியாளர்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்திற்கு வரி வருமானத்தை இழக்கச் செய்யும் வகையில் பொதிகள் ஊடாக இலங்கைக்கு கையடக்கத் தொலைபேசிகள் இறக்குமதி செய்யப்படுவதாக கையடக்கத் தொலைபேசி இறக்குமதியாளர்களின் ஒன்றியத்தின் உறுப்பினர் பிரியந்த ஜயசிங்க குறிப்பிட்டார்.
மேலும்,
“கைப்பேசிகள் இறக்குமதியின் போது, ​​அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல் பொதிகளின் ஊடாக கைப்பேசிகள் கொண்டு வரப்படுவதை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம்.

இதன் ஊடாக பாரியளவில் வரி வருமானம் இழக்கப்படும் நிலையில், 2021-2022 ஆண்டுகளில் மட்டும் சுமார் 100 மில்லியன் டொலர்கள் உண்டியல் முறையில் வௌியேறியுள்ளது.

ஏற்றுக்கொள்ளப்பட்ட வங்கி முறையின் கீழ் எந்த பரிவர்த்தனையும் இடம்பெறுவதில்லை.

எங்களின் தோராயமான கணக்கீடுகளின்படி, அரசாங்கத்திற்கு சுமார் மூன்றரை பில்லியன் ரூபாய் வரி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட 20 பேர் கொண்ட குழுவே இவ்வாறு தொலைபேசிகளை இலங்கைக்கு கொண்டு வருகின்றது.

இந்த கைப்பேசிகள் எதுவும் TRC ஆல் அங்கீகரிக்கப்படவில்லை. இது குறித்து அரசிடம் எந்த தகவலும் இல்லை. எனவே, ​குறித்த கைப்பேசிகளை இவ்வாறு கொண்டு வருவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும்.”
எனவும் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *