(UTV | கொழும்பு) – வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது டெங்கு நோய் தோற்று
நாட்டில், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் வரலாறு காணாத உயர்வை பதிவு செய்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின் கடந்த சில நாட்களில் 4,387 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, அவர்களில் 32.5 சதவீதமானவர்கள் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும்
கடந்த 10 மாதங்களில் மாத்திரம் 20,334 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணபட்டுள்ளதாகவும் தோற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாது டெங்கு நோயினால் 145 நோயாளர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், இந்நாட்களில் பதிவாகும் காய்ச்சலின் அறிகுறிகளும் டெங்குவின் அறிகுறிகளும் பெரும்பாலும் ஒத்திருப்பதால்,
நோயின் நிலையைத் தீர்மானிக்காமல் உட்கொள்ளும் மருந்துகளால் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්