தேர்தல் பிரச்சனைகளுக்கு விசேட பிரிவு மற்றும் தொலைபேசி இலக்கம்

(UTV | கொழும்பு) –  தேர்தல் பிரச்சனைகளுக்கு விசேட பிரிவு மற்றும் தொலைபேசி இலக்கம்

எதிர் வரும் உள்ளூராட்சி தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் பெண் வேட்பாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் முறைப்பாடு அளிப்பதற்கு பெப்ரல் அமைப்பு விசேட பிரிவினை நிறுவியுள்ளதோடு, அதற்கான தொலைபேசி இலக்கங்களையும் வழங்கியுள்ளது.

இது தொடர்பில் பெப்ரல் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது,

1. பெப்ரல் அமைப்பு அரச சொத்துக்கள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம், வாக்காளர்களுக்கு இலஞ்சம் வழங்குதல், பொருட்கள் வழங்குதல், குறிப்பாக உள்ளூராட்சி மன்றங்களுக்கு உரித்தான சொத்துக்களை தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துதல், புதிய நியமனங்களை வழங்குதல், இடமாற்றங்களை வழங்குதல் உள்ளிட்ட தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் கண்காணித்து வருகிறது.

அதற்கமைய ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ளூராட்சி மன்றங்களிலோ அல்லது தொகுதிகளிலோ இவ்வாறான தேர்தல் சட்ட மீறல்கள் இடம்பெற்றால், அவை தொடர்பில் முறைப்பாடளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அதுமட்டுமல்லாது, 2. அனுபவம் வாய்ந்த சட்டத்தரணிகளை உள்ளடக்கி எம்மால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இதற்கான பிரிவில், தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் முறைப்பாடளிப்பதன் மூலம் அவற்றுக்கான துரித தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

அதேபோன்று 3. பெண் வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடும்போது எதிர்கொள்ள நேரிடும் பிரச்சினைகள் தொடர்பில் முறைப்பாடளிப்பதற்கு விசேட தொலைபேசி இலக்கமும் வழங்கப்பட்டுள்ளது.

👉075-8989120 என்ற இலக்கத்துக்கு பெண் வேட்பாளர்கள் தமது முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும்.

👉அதற்கமைய 011-2558570, 011-2558571, 075-3505245, 075-8989104 ஆகிய இலக்கங்களுக்கு அழைத்தும் முறைப்பாடளிக்கலாம்.

👉அத்தோடு 011-25585572, 011-2558579 ஆகிய தொலைநகல் இலக்கங்களுக்கும், slgelection2023@.gmail.com, tlgelection2023@gmail.com ஆகிய மின்னஞ்சல் முகவரிகளுக்கும்

முறைப்பாடுகளை அனுப்பி வைக்கலாம்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *