கடவுச்சீட்டு வழங்கும் பனி மீண்டும் ஆரம்பம்

(UTV | கொழும்பு) –  கடவுச்சீட்டு வழங்கும் பனி மீண்டும் ஆரம்பம்

பத்தரமுல்ல குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் கணனி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த கடவுச்சீட்டு வழங்கும் பணி இன்று (14) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கடவுச்சீட்டு வழங்குவதை தற்காலிகமாக நிறுத்த பத்தரமுல்ல குடிவரவு – குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் நேற்று (13) பிற்பகல் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நேற்றைய தினம் விண்ணப்பங்களை ஏற்றுக்கொண்ட அனைவருக்கும் கடவுச்சீட்டு இன்று வழங்கப்படும் என குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

இன்று திணைக்களத்திற்கு திரும்ப முடியாதவர்களுக்கு உரிய கடவுச்சீட்டுகளை கொரியர் சேவை மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக இன்று நேரம் ஒதுக்கியவர்கள் இன்று சமூகமளிக்க வேண்டாம் என குடிவரவு – குடியகல்வு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

அனைவரும் தமது நியமனத்தை முன்பதிவு செய்த நாளில் வராமல் மறுநாள் வருமாறு குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய மக்களுக்கு அறிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *