(UTV | கொழும்பு) – சீனாவுக்கு பறந்தார் முன்னாள் ஜனாதிபதி
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அவரது மனைவி அயோமா ராஜபக்ஷவும் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சீனா செல்வதற்கான எதிர்பார்ப்புடன் மலேசியாவின் கோலாலம்பூருக்குச் சென்றுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதியும் அவரது மனைவியும் இன்று அதிகாலை 12.25 மணியளவில் மலேசியாவின் கோலாலம்பூருக்கு மலேசியன் ஏர்லைன்ஸ் விமானமான MH-178 இல் புறப்பட்டுள்ளனர்
ஆனால் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை விட்டு வெளியேற விமான நிலைய விமான சரக்கு முனையத்தை பயன்படுத்தியுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්