ஈஸ்டர் தாக்குதல் நடந்து 04 ஆண்டுகள் – மௌன அஞ்சலி

(UTV | கொழும்பு) –  ஈஸ்டர் தாக்குதல் நடந்து 04 ஆண்டுகள் – மௌன அஞ்சலி

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் நான்காம் ஆண்டு நினைவுவேந்தலை முன்னிட்டு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வளாகத்தில் விசேட நிகழ்வு இன்று ஆரம்பமாகியுள்ளது.

அதன்படி இன்று (21) காலை 8.45 மணியளவில் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் நான்காம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம் தொடக்கம் கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயம் வரை மக்கள் மதில் ஒன்றை அமைக்க கத்தோலிக்க திருச்சபை இன்று திட்டமிட்டுள்ளது.

அதன்படி இன்று காலை 8 மணி முதல் கொழும்பு – நீர்கொழும்பு நெடுஞ்சாலையில் கொச்சிக்கடை தேவாலயத்தில் இருந்து கட்டுவாப்பிட்டி தேவாலயம் வரையில் இந்த மக்கள் மதில் அமைக்க திட்டமிடப்பட்டுள்லாமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *