மீண்டும் முட்டை பிரச்சினை

(UTV | கொழும்பு) – மீண்டும் முட்டை பிரச்சினை

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை வெளியிடுவதற்கான சான்றிதழ்களை வழங்குவதில் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை மேலும் காலதாமதம் செய்வதால் தொடர் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அரச வர்த்தக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக திட்டமிட்டபடி முட்டைகளை சந்தைக்கு வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்தார்.

எதிர்காலத்தில் மேலும் 5 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, பிலியந்தலை பிரதேசத்தில் அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்யப்பட்ட கடையொன்று நுகர்வோர் அதிகாரசபையின் சுற்றிவளைப்பு திணைக்கள அதிகாரிகளினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

வர்த்தமானி விலையை விட 9 ரூபா அதிக விலையில் முட்டை விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சோதனையின்போது, ​​கடையில் தலா 3,120 முட்டைகள் அடங்கிய 12 பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த முட்டைகளை 44 ரூபா கட்டுப்பாட்டு விலையில் நுகர்வோருக்கு விற்பனை செய்யுமாறு நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வர்த்தகரை எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *