யாழில் சிறுவர்களை கடத்த முயன்றவர் மன நலம் பாதிக்கப்பட்டவரா?

(UTV | கொழும்பு) –  யாழில் சிறுவர்களை கடத்த முயன்றவர் மன நலம் பாதிக்கப்பட்டவரா?

யாழ். நாவாந்துறையில் சிறுவர்களை கடத்த முயன்றார் என அப்பகுதி மக்களால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த நபர் காணாமல்போனமை தொடர்பாக ஏற்கனவே குடும்பத்தினரால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை (16) யாழ். நாவாந்துறை பகுதியில் சிறுவர் ஒருவரை கடத்த முயன்ற குற்றச்சாட்டில் அப்பகுதி மக்களால் நபர் ஒருவர் மடக்கி பிடிக்கப்பட்டு யாழ். பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

மக்களால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சந்தேகநபரை தடுத்து வைத்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கடந்த வாரம் மன்னார் பகுதியில்பாடசாலை மாணவர்களை வாகனங்களில் கடத்த முயற்சிக்கும் சம்பவங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *