(UTV | கொழும்பு) – மதங்களை அவமதித்த மத போதகர் ஜெராம் விரைவில் இலங்கைக்கு…..
எல்லா மதங்களையும் அவமதிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய பிரசங்கங்களை வழங்கிய கிறிஸ்தவ மத போதகர் ஜெரம் பெர்னாண்டோ ஞாயிற்றுக்கிழமை மீண்டும் இலங்கை வரவுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் , “வணக்கம் குடும்பத்தினரே, நீங்கள் அனைவரும் அறிந்தது போல, நான் முன்பு திட்டமிடப்பட்ட அதிகாரப்பூர்வ பயணங்களில் ஈடுபட்டு வருகிறேன், ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்புவேன்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் .
ஜெரம் பெர்னாண்டோ என்ற கிறிஸ்தவ மத போதகர் ஏனைய மதங்களை அவமதிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய பிரசங்கங்களை வழங்கிய காணொளி ஒன்று கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரவி நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது .
இதையடுத்து, அவர் கடந்த 14 ஆம் திகதி தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் , இன்று (17) குற்றப் புலனாய்வுப் பிரிவினர், ஜெரம் பெர்னாண்டோவுக்கு எதிரான பயணத் தடையை கோட்டை நீதவான் நீதிமன்றில் பெற்றுள்ளனர்.
இதையே தொடர்ந்து தற்போது ஜெரம் பெர்னாண்டோ ஞாயிற்றுக்கிழமை மீண்டும் நாடு திரும்புவதாக அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්