(UTV | கொழும்பு) – “கடவுச்சீட்டு அலுவலகத்தில் கண்டெடுக்கப்பட்ட சடலம்” ……!!
ராணுவச்சிப்பாய் வழங்கிய தகவலின் பிரகாரம் சடலம் மீட்பு
▪️ கொழும்பு, பத்தரமுல்லை கடவுச்சீட்டு அலுவலகத்தின் கதிரையொன்றில் அமர்ந்திருந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது
கடவுச்சீட்டு அலுவலகத்தின் காவல் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவச் சிப்பாய் ஒருவர் இன்று அதிகாலை வழங்கிய தகவலையடுத்து சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடவுச்சீட்டு அலுவலகத்தின் சுத்திகரிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 73 வயதான முதியவர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
இறந்தவர் களனி பிரதேசத்தைச்சேர்ந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது. மேலதிக பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්