காத்தான்குடியில் போதைக்கு எதிராக – பாரிய ஆர்ப்பாட்டம்.

(UTV | கொழும்பு) –

காத்தான்குடி வரலாற்றில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் வீதியில் இறங்கி போதை வஸ்து பாவனைக்கு எதிராகவும் போதைவஸ்து விற்பனையாளர்களுக்கு எதிராகவும் பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் சத்திய பிரமாணத்திலும் ஈடுபட்டனர்.
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மதனம் காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள சகல அமைப்புக்களுடனும் இணைந்து ஏற்பாடு செய்த இந்த பாரிய ஆர்ப்பாட்டம் காத்தான்குடி முகைதீன் பெரிய மெத்தை ஜும்மா பள்ளிவாயல் மற்றும் புதிய காத்தான்குடி அக்சா ஜும்மா பள்ளிவாயல் ஆகியவற்றிலிருந்து ஆரம்பமான பாரிய கண்டன ஆர்ப்பாட்டமும் பேரணியும் காத்தான்குடி குர்ஆன் சதுக்கத்திற்கு வந்து அங்கு ஒன்று திரண்ட மக்கள் அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் சத்திய பிரமாணம் சொல்லிக் கொடுக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் போதைக்கு எதிராக சத்திய பிரமாணத்தில் ஈடுபட்டனர்.

காத்தான்குடி பள்ளிவாயல்கள் பள்ளி வாயில்களின் நிர்வாகிகள் அரசியல் பிரமுகர்கள் வைத்தியர்கள் சட்டத்தரணிகள் கல்வியாளர்கள் புத்திஜீவிகள் இளைஞர்கள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த சத்திய பிரமாண நிகழ்வில் கலந்து கொண்டனர். எறிக்கும் பாரிய வெயிலையும் பாராது பல மணி நேரம் குறித்த ஆர்ப்பாட்டத்திலும் சத்திய பிரமாணத்திலும் பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. அன்னைய நாட்களில் காத்தான்குடி பிரதேசத்தில் போதை வஸ்து பாவனை மற்றும் போதைப்பொருள் விற்பனை என்பன அதிகரித்திருப்பதையடுத்துகுறித்த போதையில் இருந்து மக்களை மீட்டெடுக்கும் முகமாகவே இவ்வாறானது நிகழ்வை நடாத்தியதாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *