வறுமைக் கோட்டை துல்லியமாக கண்டறிய வேண்டும் – சஜித் பிரேமதாச.

(UTV | கொழும்பு) –

அஸ்வெசும திட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன், நாட்டிலுள்ள ஒரு குடும்ப அலகின் வருமானம் மற்றும் செலவுக் கணக்கெடுப்பு நடத்தி, வறுமைக் கோட்டைக் கண்டறிந்து,ஏழை, எளியவர்களைக் கண்டறிந்து அதைச் செயல்படுத்த வேண்டும் என்றும்,இங்கு எத்தகைய விஞ்ஞானபூர்வ தன்மையின்றி 20 இலட்சம் பேர் தெரிவு செய்யப்பட்டு ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி மூலம் பல்வேறு வேலைத்திட்டங்களுக்காக எமது நாட்டுக்கு வழங்கப்படும் பணம் பகிர்ந்தளிக்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அரசாங்கத்தில் எல்லாமே எதிர் திசையிலே நடந்துள்ளதாகவும், முதலில் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்யாமல் அஸ்வெசும திட்டத்தை நிறைவேற்றியதால் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பாதகங்களைச் சந்தித்துள்ளனர் என்றும்,முறைமையில் மாற்றம் வர வேண்டும் என்று தரவுகளை மையமாகக் கொண்ட அறிவியல் முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தம்பட்டம் அடித்தாலும்,அது நடைமுறையில் இல்லை என்றும்,இத்திட்டம் சிறப்பாக இருந்தாலும், திட்டத்தில் கடுமையான குறைபாடுகள் சிக்கல்கள் உள்ளன என்றும்,இது தொடர்பில் பல தடவைகள் தடைகளுக்கு மத்தியிலும் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சமுர்த்தி கொடுப்பணவு வழங்குவதற்கு முன்பே வறுமைக் கோட்டைக் கணக்கிட வேண்டும் என்றும்,தரவுகள் மற்றும் தகவல்கள் இல்லாமல் ஏழ்மையான மக்களை தெரிவு செய்ய சந்தர்ப்பம் வழங்கப்படுமாயின் இந்த வேலைத்திட்டம் கூட தவறான வழியில் நடைமுறைப்படுத்தப்படலாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.
நமது நாட்டில் கிராமப்புற,நகர்ப்புற மற்றும் தோட்டத் துறைகளில் சுமார் 60 இலட்சம் குடும்பங்கள் உள்ளன என்றும்,இவர்களின் வருமானம் கூட வேறுபட்டது என்றும்,இந்தக் குடும்பங்களின் வருமானம் மற்றும் செலவுகளைக் கணக்கிட்டு வறுமையை வரையறுக்க விஞ்ஞானபூர்வ முறை உருவாக்கப்பட வேண்டும் என்றும்,இது பல அரசாங்கங்கள் செய்த பாரிய தவறு எனவும்,இதனை இவ்வாறு வரையறுப்பதற்கு கூட தாம் எதிர்ப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பேராட்டத்திற்குப் பிந்தைய காலத்தில் அதிகாரிகள் மற்றும் சமுர்த்தி குறித்து விமர்சனங்கள் இருந்தாலும் இந்த அதிகாரிகளைப் பற்றி எதிர்மறையான கருத்துக்களை எடுக்காமல்,அவர்களைப் பயன்படுத்தி,தேசிய உற்பத்தி செயல்முறைக்கு நல்ல மதிப்பைச் சேர்த்து, நாட்டின் முன்னேற்றத்தின் ஒரு பகுதியாக மாற்றலாம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *