தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலை தீக்கிரையாகி பல கோடி ரூபா சொத்துக்கள் சேதம்!

(UTV | கொழும்பு) –

திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் ஏற்பட்ட திடீர் மின் ஒழுக்கினால் வைத்தியசாலை உபகரணங்கள் முற்றாக சேதமாக்கப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் இன்று காலை இடம் பெற்றுள்ளது. மின் ஒழுக்கு காரணமாக தீவிபத்து இடம் பெற்றிருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரனையின் மூலம் தெரியவந்துள்ளது. இதில் பல தரப்பட்ட மருந்துப் பொருட்கள்,ஆய்வு கூட உபகரணங்கள் பல இலட்சக்கணக்கான சொத்துக்கள் தீக்கிரையாகி சாம்பலாகின. தீயை அனைப்பதற்காக திருகோணமலை தீ அனைக்கும் பிரிவு மற்றும் முள்ளிப்பொத்தானை திஸ்ஸபுர இரானுவத்தினர் பொலிஸார் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

குறித்த சம்பவ இடத்துக்கு தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி மற்றும் மாகாண சுகாதார சேவைகள் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.முரளிதரன் உள்ளிட்டோர் சென்று தீ விபத்து தொடர்பில் ஆராய்ந்தனர். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *