மலையகத்துக்கான ரயில் போக்குவரத்தில் தாமதம்!

(UTV | கொழும்பு) –

பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயில், இன்று நண்பகல் 12 .15 மணியளவில் ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவ ரயில் நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று முற்பகல் 10.15 மணியளவில் பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த அதிவேக ரயிலே இவ்வாறு தடம் புரண்டதாக ரயில் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ரயில் தடம்புரண்டதால் பதுளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த ரயில், பண்டாரவளை ரயில் நிலையத்திலும், கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த சரக்கு ரயில் ஹப்புத்தளை ரயில் நிலையத்திலும் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மலையகத்துக்கான ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்படக்கூடும் எனவும் புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *