(UTV | கொழும்பு) –
சமனலவெவ நீர்த்தேக்கத்தின் மேற்பரப்பில் மிதக்கும் சூரிய சக்தி நிலையத்தை அமைப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிப்பதன் மூலம் நீர்த்தேக்கங்களின் மேற்பரப்பில் சூரிய சக்தியை உருவாக்குவது குறைந்த இடவசதி உள்ள நாடுகளுக்கு மிகவும் பொருத்தமாக இருக்குமென அரசாங்கம் கூறுகிறது.
இதன்படி, இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை மகாவலி அதிகார சபையின் கீழ் உள்ள நீர்த்தேக்கங்களின் மேற்பரப்பில் சூரிய சக்தி உற்பத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நல்ல வாய்ப்புகள் இருப்பதாகவும் இலங்கை மின்சாரத்தின் கீழ் சமனலவெவ நீர்த்தேக்கத்தில் சுமார் 100 ஹெக்டேயர் நீர் பரப்பு இருப்பதாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த இடத்தை 150-200 மெகாவாட் மிதக்கும் சோலார் ஃபோட்டோவோல்டாயிக் ஆலை அமைப்பதற்கு பயன்படுத்த முடியும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්