சத்தீஸ்கரில் 20 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

(UDHAYAM, COLOMBO) – இந்தியாசத்தீஸ்கரில் நக்சலைட்டுகளுக்கும் சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த சண்டையில் 20 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக சி.ஆர். பி.எப்..ஜி. தெரிவித்துள்ளார்.

சத்தீஷ்கர் மாநிலம் சுக்மா பகுதியில் கடந்த மாதம் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சி.ஆர்.பி.எப்.) மீது நக்சல் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 25 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானார்கள்.

இந்த சம்பவத்துக்கு இந்திய பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்தார். சி.ஆர்.பி.எப். வீரர்களின் உயிர்த்தியாகம் வீண் போகாது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் நக்சலைட்டுகளுக்கு  பதிலடி கொடுப்பது தொடர்பாக மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் டெல்லியில் நடைபெற்ற  உயர்நிலை ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் சத்தீஷ்கரில் நக்சலைட்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சுமார் 350 பேர் ஈடுபட்டனர்.

அப்போது பிஜப்பூரில் பதுங்கியிருந்த நக்சலைட்டுகளுக்கும் சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.

இந்த சண்டையில் 20 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக சி.ஆர். பி.எப்..ஜி. தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த துப்பாக்கி சண்டையில் 2 வீரர்கள் பலியானதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுட்டுக் கொல்லப்பட்ட நக்சலைட்டுகள், அதிரடி பாதுகாப்பு படை வீரர்கள் அணியும் ஆடைகளை அணிந்திருந்தனர்.

சுக்மா பகுதியில் சி.ஆர். பி.எப். வீரர்கள் மீது தாக்குதல் நடந்த சம்பவத்துக்கு பிறகு நக்சலைட்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் 26 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதில் 15 பேர் சுக்மா தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்கள். தற்போது 20 பேர் துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *