தாமரை கோபுரத்தில் ஆரம்பமாகும் அப்சீலிங் சாகச விளையாட்டுக்கள்!

(UTV | கொழும்பு) –

இலங்கையில் முதன்முதலில் அப்சீலிங் சாகச விளையாட்டை கொழும்பு லோட்டஸ் டவர் முகாமைத்துவ கம்பனி (பிரைவேட்) லிமிடெட் ஆரம்பித்துள்ளது. அப்சீலிங் என்பது உயரமான இடத்திலிருந்து செங்குத்தாக கீழே இறங்க கயிற்றைப் பயன்படுத்தி நிகழ்த்தும் சாகச விளையாட்டாகும்.

அப்சீலிங் சாகச விளையாட்டில் பொதுமக்கள் ஈடுபடுவதற்கான வாய்ப்பு டிசம்பர் மாத இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரிமாத தொடக்கத்தில் வழங்கப்படலாம் என கொழும்பு லோட்டஸ் டவர் மேனேஜ்மென்ட் கம்பனி (பிரைவேட்) லிமிடெட் பிரதம நிறைவேற்று அதிகாரி மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

பிரசாத் சமரசிங்க சாகச விளையாட்டில் ஈடுபட தாமரை கோபுரத்திற்கு வருகை தருமாறு உள்ளூர் மற்றும் வெளிநாட்டினரிடம் வேண்டுகோளை விடுத்தார். தாமரை கோபுரத்திலிருந்து 195 மீற்றர் ஏறி இறங்கும் சாகசத்தில் ஆறு உறுப்பினர்களைக் கொண்ட குழு ஈடுபட்டது. பொது அனுபவத்திற்காக இந்த திட்டத்தை பெற்ற பிறகு, நாட்டிலேயே மிக உயரமான மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டிடத்தில் இருந்து கீழே இறங்கிய அனுபவத்தை மக்கள் பெறுவார்கள். மருத்துவரின் சான்றளிக்கப்பட்ட மருத்துவ அறிக்கையுடன் சாகசத்தை நிகழ்த்த அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும், தாமரை கோபுரம் திறக்கப்பட்டு பதினான்கு மாதங்களுக்குப் பிறகு, மொத்தம் 1.35 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் கோபுரத்தைப் பார்வையிட்டதாக தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.
அதில், சுமார் 34,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தாமரைகோபுரத்தைப் பார்வையிட்டுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *