கோலி பற்றிய கருத்திற்கு வருத்தம் தெரிவித்த குசல்!

(UTV | கொழும்பு) –

இந்திய அணியின் சிறந்த துடுப்பாட்ட வீரர் விராட் கோலி 49 சதங்கள் அடித்த போது செய்தியாளர் சந்திப்பில் வாழ்த்து தெரிவிக்காதது வருத்தம் அளிப்பதாக இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர்,

“அன்று நான் முதலில் பயிற்சிக்கு சென்றேன். போன பிறகு பிரஸ் இருந்தது. அங்கே பிரஸ் இருக்கிறது என்று முன்பே கூறியிருந்தனர். அடுத்த நாள் பங்களாதேஷூடன் போட்டி இருந்தது. அங்கு சென்ற பிறகு விராட் கோலி பெற்ற ஓட்டங்கள் தொடர்பில் அறிந்திருக்கவில்லை. அப்போது என்னிடம் அந்த கேள்வியை கேட்டபோது எனக்கு புரியவில்லை. எமது அணி பங்களாதேஷ் அணியுடன் மோதவுள்ளமை குறித்த கேள்விகளுக்கு பதில் வழங்கவே சென்றிருந்தேன். எனினும் அந்த நேரத்தில் நான் அவ்வாறு கூறியது தவறு என நிறைக்கிறேன். ஏனென்றால் 100 ஓட்டங்கள் 49 முறை பெறுவது என்பது எளிதான விடயம் அல்ல. ஒரு வீரராக, அது எவ்வளவு கடினம் என்று எனக்குத் தெரியும். அவர் என்ன கேள்வி கேட்டார் என எனக்கு உண்மையில் புரியவில்லை. எனினும் நான் அன்று கூறிய வார்த்தை குறித்து துடுப்பாட்ட வீரராக வருந்துகிறேன். விராட் கோலியை உலகுக்கு தெரியும், அவர் எவ்வளவு சிறந்த வீரர் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் அந்த நேரத்தில் அவரை வாழ்த்தாததற்கு வருந்துகிறேன்.

“நாங்கள் பல போட்டிகளில் தோல்வியடைந்தோம், நாங்கள் இந்தியாவுடன் ஆசிய கிண்ணத்தை இழந்தோம், நாங்கள் உலகக் கிண்ண போட்டியில் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தோம். அந்த நேரத்தில், இலங்கை அணி வெல்ல வேண்டும் என்று நானும் விரும்பினேன். இந்திய வீரர்கள் எங்களைப் பற்றி தாழ்வாக பேசினர். அணியின் தலைவர் என்ற வகையில் அதனை ஏற்க முடியாது. உணர்ச்சி வசப்பட்டே அன்று பதில் சொன்னேன்.பின்னர் நான் ஏதோ தவறாக சொன்னதாக உணர்ந்தேன்.அதற்கு நான் மிகவும் வருந்துகிறேன். ” என்றார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *