சபாநாயகரின் தடை உத்தரவுடன் சபை மீண்டும் ஆரம்பம்!

(UTV | கொழும்பு) –

பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து 5 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சபை அமர்வு 30 நிமிடங்களுக்குப் பின்னர் ஆரம்பமானது.

இதன் போது சபைக்குள் கையடக்க தொலைபேசிகளைப் பயன்படுத்தி புகைப்படம், வீடியோ எடுத்தல் மற்றும் நேரலை (Live) ஒளிபரப்பு போன்றவற்றை தவிர்க்குமாறு சபாநாயகர் உத்தரவிட்டார்.

அத்தோடு பாராளுமன்ற ஒழுங்கு விதிகளை மீறி செயற்படுவோருக்கு எதிராக கடும் நடபவடிக்கை எடுக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆற்றிய உரையொன்றை ஆளுங்கட்சி எம்.பிக்கள் குழப்பி அவரின் ஆசனத்தை நோக்கிவந்து முற்றுகையிட்டதால் சபையை கட்டுப்படுத்த முடியாத நிலையில் சபை நடவடிக்கைகளை 5 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *