(UTV | கொழும்பு) –
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலசிற்கு கடல்கடந்த சொத்துக்கள் பன்டோரா பேப்பர்களை வெளியிட்ட ;- புலனாய்வு பத்திரிகையாளர்களின் சர்வதேச கூட்டமைப்பு அமைப்பு சற்று முன்னர் தகவல் வெளியிட்டுள்ளது.
கசிந்த ஆவணங்கள் மற்றும் பிரிட்டனின் ஆவணங்கள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து ஐசிஐஜே இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
லண்டனில் செல்வந்தர்கள் வசிக்கும் பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் புரொம்டன் புரொபெர்ட்டிஸ் நிறுவனத்திற்கு தொடர்மாடியொன்று உள்ளதாகவும் 2006 இல் 960,000 டொலர்களிற்கு இந்த சொத்தினை அவர் கொள்வனவு செய்தார் எனவும் ஐசிஐஜே தகவல் வெளியிட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் பன்காம் வென்ஞசர்ஸ் நிறுவனத்திற்கு 2008 முதல் லண்டனின் செல்சியாவிற்கு அருகில் சொத்தொன்று உள்ளதாகவும் ஐசிஐஜே தெரிவித்துள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්