ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விமான நிலைய ஊழியர்கள்!

(UTV | கொழும்பு) –

கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்கள் தமது சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி நேற்று மதிய உணவு நேரத்தின் போது விமான நிலைய வருகை முனையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்களால் புதிதாக உருவாக்கப்பட்ட “விமான நிலைய கூட்டு தொழிற்சங்கம்” இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

இந்தப் போராட்டத்தின் பின்னர் பேசிய விமான நிலைய கூட்டுத் தொழிற்சங்கத்தின் தலைவர் தம்மிக்க பெர்னாண்டோ, எங்களின் இந்தப் புதிய தொழிற்சங்கத்தை அரசியலுக்கு அப்பாற்பட்டுப் பேணி வருகின்றோம். எங்கள் சமூகம் எந்த ஒரு தாய் நிறுவனத்திற்கும் சொந்தமானது அல்ல. எங்களுக்கான சம்பள உயர்வை பெற்றுத் தர வேண்டும் என்பதே இந்தப் பிரச்சாரத்தின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. விமான நிலைய ஊழியர்களுக்கு 06 வருடங்களாக சம்பள உயர்வு கிடைக்கவில்லை. எனவே, வரும் 12/31க்கு முன் சம்பள உயர்வு குறித்து எழுத்துப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் தொகையை அதில் கட்டாயமாக குறிப்பிட வேண்டும். இதனை நிறைவேற்றாவிட்டால் 2024 ஜனவரி 03 ஆம் திகதி முதல் பாரிய தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடத் தயாராக உள்ளோம் என்றும் அவர் கூறினார்.

குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களையே இந்த போராட்டத்திற்கு அழைத்துள்ளோம் என்றும், விமான நிலையத்தின் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் ஊழியர்கள் இந்த நிகழ்வுக்கு அழைக்கப்படவில்லை என்றும் தலைவர் மேலும் தெரிவித்தார்.
அதன் பின்னர், தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் பொறியியலாளர் அஜித் கல்கெட்டியவிடம் கையளித்தனர் இதற்காக நீர்கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் மத்தியஸ்தம் வகித்தனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *