(UTV | கொழும்பு) –
எதிர்வரும் ரமழான் மாதத்தில் முஸ்லிம்களுக்கு இலவசமாக விநியோகிப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் பேரீத்தம் பழத்திற்கான இறக்குமதி வரியினை நீக்கி விலக்களிக்குமாறு முஸ்லிம் சமய பண்ட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இஸட்.ஏ.எம்.பைசல் நிதியமைச்சரும், ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ரமழான் மாதத்தில் சவூதி அரேபியா உட்பட அரபு நாடுகள் சில முஸ்லிம்களுக்கென இலவசமாக பேரீத்தம் பழங்களை அனுப்பி வைப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්