இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில்!

(UTV | கொழும்பு) –

இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று ( நடைபெறவுள்ளது. பாராளுமன்றம் காலை 09.30 மணிக்கு கூடவுள்ளதுடன், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.
உயர் நீதிமன்றத்தினால் முன்வைக்கப்பட்ட திருத்தங்களுக்கு உட்பட்டு, பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்காக ஊடகங்கள், இளைஞர்கள், பாரம்பரியம் மற்றும் நவீன குடிமக்கள் தொடர்பான துறைசார் கண்காணிப்பு குழுவின் அங்கீகாரமும் நேற்று இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்திற்கு பெறப்பட்டது.

இலங்கையில் ஒரு நிகழ்வைப் பற்றிய சில அறிக்கைகளை இணையத்தளத்தில் தொடர்புகொள்வதைத் தடை செய்வதற்காக மோசடி நோக்கங்களுக்காக ஒன்லைன் கணக்குகளைப் பயன்படுத்துவதைத் தடுக்கவும் இந்த சட்டமூலம் ஏற்பாடு செய்கிறது.
மேலும் இந்த நாட்டில் தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் ஒன்லைன் தளங்களை அடையாளம் காணவும், ஒரு சம்பவத்தைப் பற்றிய தவறான அறிக்கைகளைத் தொடர்புகொள்வதற்காக பணம் மற்றும் பிற உதவிகளை வழங்குவதை ஒடுக்கவும் இந்த சட்டமூலத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஒன்லைன் அமைப்புகளின் பாதுகாப்புக்கான ஆணைக்குழுவை நிறுவுவதற்கும் இந்த சட்டமூலம் வழிவகை செய்கிறது.
இந்த சட்டமூலம் தொடர்பான விவாதம் இன்றும் நாளையும் நடைபெறும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இந்த சட்டமூலத்தை திடீரென நிறைவேற்றுவதற்கு தாங்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. அது தொடர்பில் சபாநாயகருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *