(UTV | கொழும்பு) – விவாதங்கள் மூலம் அங்கீகரிக்கப்பட்ட திருத்தங்களின் அடிப்படையில் இணையவழி பாதுகாப்புச் சட்டத்தை திருத்துவதற்கான வரைவு சட்டமூலத்தை தயாரிக்க சட்ட வரைவாளர்களுக்கு உத்தரவிட பொதுப் பாதுகாப்பு அமைச்சர் அளித்த தீர்மானத்திற்கு அரசாங்கம் அனுமதி அளித்தது.
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இணையவழி பாதுகாப்புச் சட்டத்தின் விதிகள் தற்போது செயற்படுத்தப்பட்டு வருகின்றன.
மேற்படி வரைவு சட்டமூலம் தொடர்பாக பாராளுமன்றத்தில் குழு அமர்வுகளில் சமர்ப்பிக்கப்பட்ட திருத்தங்கள், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி செய்யப்பட வேண்டும் என்பதால், அத்துறை சார்ந்த வல்லுனர்களால் முன்வைக்கப்பட்ட திருத்தங்களை அறிமுகம் செய்ய வாய்ப்பு இல்லை.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්