(UTV | கொழும்பு) – இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழக அரபுமொழி மற்றும் இஸ்லாமிய கற்கைகள் பீடத்தின் இஸ்லாமிய கற்கைகள் திணைக்களத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ்.எம்.நபீஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபுபக்கர் புதிய திணைக்களத் தலைவரை நியமித்துள்ளார்.
இந்நிகழ்வின்போது பீடாதிபதி எம்.எச்.ஏ.முனாஸ் நியமனக்கடிதத்தை கலாநிதி எஸ்.எம்.முகம்மட் நபீஸிடம் ஒப்படைத்தார்.
அதேவேளை, குறித்த திணைக்களத்தின் முன்னாள் தலைவர் பேராசிரியர் ஆர்.ஏ.சர்ஜுன் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ ஆவணங்களை புதிய தலைவர் கலாநிதி எஸ்.எம்.முகம்மட் நபீஸிடம் கையளித்தார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්