“கோட்டாபயவின் நூலை நான் இன்னமும் வாசிக்கவில்லை வாசிக்க விரும்பவும் இல்லை” பசில் ராஜபக்ச

கோட்டாபயவின் நூலை நான் இன்னமும் வாசிக்கவில்லை வாசிக்கவிரும்பவும்இல்லை என முன்னாள் நிதியமைச்சர் பசில்ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

என்னிடம் அந்த நூல் இல்லை என தெரிவித்துள்ள அவர் கோட்டாபய அந்த நூலின்ஒரு பிரதியை எனக்கு வழங்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபயவின் நூலின் டிஜிட்டல் வடிவத்தையாவது வாசித்தீர்களா என்ற கேள்வி;;க்கு பசில் ராஜபக்ச அதுவும் இதுவரை எனக்கு கிடைக்கவில்லை என  தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ஊடகப்பிரிவு அந்த நூலின் டிஜிட்டல் பிரதியை எனக்கு வழங்கவில்லை எனவும்அவர் தெரிவித்துள்ளார்.

பின்னர் தான் அந்த நூலைவாசிக்க விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த நூலை பற்றி எனக்கு எந்த கோபமும் இல்லை ஆனால் கோட்டபய நூல் ஒன்றை எழுதவுள்ளார் அதற்கான விபரங்களை சேகரிக்கின்றார் என அறிந்தேன் எனவும்குறிப்பிட்டுள்ள பசில்ராஜபக்ச நாமல்;கூட புத்தககடையொன்றிலேயே அந்த நூலை வாங்கியுள்ளார் கோட்டாபயவிடமிருந்து அந்த நூல் எனக்கு கிடைக்கும் என நான் நம்பவில்லை எங்கள் குடும்பத்தில்எந்த புரிந்துணர்வுஇன்மையும் இல்லை அவர்கள் அந்த நூலை எனக்கு வழங்காதது ஒரு பிரச்சினையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *