பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி குழுக் கூட்டம் 20 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு அதன் தேசிய அமைப்பாளர் பெசில் ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்று வருகிறது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்
தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையே வேட்பாளராக முன்மொழிய வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் பலரும் கட்சித் தலைமைக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றிகொள்வது மற்றும் ஆளும் கட்சியில் இருந்து எதிர்க்கட்சியில் இணையவுள்ள எம்.பி.க்கள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.