சுகாதார அமைச்சின் எச்சரிக்கை

தமிழ் – சிங்கள புத்தாண்டுடன் இணைந்து விபத்துக்கள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று இடம்பெற்ற இடைக்காலக் கூட்டத்தில் இது தொடர்பான கருத்துக்கள் வெளியிடப்பட்டன.

மற்ற காலங்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை வாகன விபத்துக்களினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றவர்களின் எண்ணிக்கை சுமார் 3 சதவீதம் அதிகமாகும் என சுகாதார அமைச்சின் விபத்து தடுப்புப் பிரிவின் நிபுணர் வைத்தியர் சமித்த சிரிதுங்க தெரிவித்தார். மற்றும் தற்காலத்தில் விபத்துக்கள் தலை மற்றும் முகத்திற்கு ஏற்படும் பாதிப்பில் அதிகரிப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *