முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விவசாயிகளுக்கு உயர்தரத்திலான மிளகாய் விதைகள் வழங்கி வைப்பு!

ஊடகப்பிரிவு-
மன்னார், முசலி பிரதேசத்தின் அகத்திமுறிப்பு அளக்கட்டு, பொற்கேணி அளக்கட்டு, வேப்பங்குளம் அளக்கட்டு, பிச்சைவாணிபங்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த, தெரிவுசெய்யப்பட்ட நூற்றுக்கணக்கான விவசாயிகளுக்கு, அதி உயர் விளைச்சல் தரக்கூடிய மிளகாய் விதைகள் வழங்கும் வைபவம், கடந்த ஞாயிற்றுக்கிழமை (31) அளக்கட்டு பிரதேசத்தில் இடம்பெற்றது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில், முசலி பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் SMM.பைரூஸின் ஏற்பாட்டில், இந்தியாவின் பாலாஜி வென்சர்ஸ் லங்கா நிறுவனத்தின் நிதி அனுசரணையில், மீள்குடியேறியுள்ள முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், மேற்படி உயர்தரத்திலான மிளகாய் விதைகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில், இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த விவசாய ஆலோசகரான கணேஷ், மன்னார் மாவட்ட விவசாய பணிப்பாளர் சகிலா பானு மற்றும் மன்னார் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் முஜாஹிர் உட்பட பிரமுகர்களும் பங்கேற்றிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *