Addon It நிறுவனத்தின் பிரதான அனுசரணையால் கத்தார் வாழ் புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்துடன் இணைந்து ஸோன் கத்தார் ஏற்பாடு செய்த கரப்பந்தாட்ட போட்டியானது நேற்றைய தினம்(26) தோஹா கேம்பிரிட்ஜ் பாடசாலையில் 11 அணிகளாக பிரிக்கப்பட்டு இப்போட்டி நடைபெற்றது.
இதில் Z-12 அணியினை வீழ்த்தி Z Force அணியினர் சம்பியன் பட்டத்தினை தமதாக்கிக்கொண்டனர்.
இந்நிகழ்வில் அதிதியாக AddonIT நிறுவனத்தின் தலைவர்களான ஷாஹித் சராபத், இம்ரான் காசிம்,ஸ்கை தமிழ் ஊடகத்தின் பணிப்பாளரும் ஊடகவியலாளருமான ஜே.எம் பாஸித் மற்றும் புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் முஹம்மட் ஷரஃப் மற்றும் உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.