தம்பலகாமம் ஆட்கொலை : பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவருக்கு 26 வருடங்களின் பின்னர் ஆயுள் தண்டனை

தம்பலகாமம் – பாரதிபுரத்தில் இடம்பெற்ற ஆட்கொலைச் சம்பவத்தில் தொடர்புபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவருக்கு 26 வருடங்களின் பின்னர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தம்பலகாமம் – பாரதிபுரம் கிராமத்தில் நிராயுதபாணியாகவிருந்த 08 தமிழர்கள் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்தனர்.

இதன்போது குறித்த பகுதியில் சட்டவிரோத ஒன்றுகூடலில் இருந்ததாக திருகோணமலை பாரதிபுரத்தில் அப்போது பணிபுரிந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.1998 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த ஒரு திகதியில் இந்த குற்றச்செயல் இடம்பெற்றுள்ளதாக பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.ஆட்கொலை தொடர்பிலான சட்டவிரோத ஒன்றுகூடலின் பங்காளிகளாக இருந்தார்கள் என்ற குற்றசாட்டில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

வட மத்திய மாகாண முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதியும் தற்போதைய குளியாப்பிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதியுமானமனோஜ் தல்கொடபிட்டியவினால் இந்த தண்டணை வழங்கப்பட்டுள்ளது.

சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 4 பொலிஸ் அதிகாரிகளில், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் இரண்டு சர்ஜன்ட்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

oruvan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *