ஈரானின் ஜனாதிபதியின் இலங்கை வருகைக்கு இஸ்ரேல் எதிர்ப்பு!

ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ராசின் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்தமை குறித்து இலங்கைக்கான இஸ்ரேலிய தூதுவர் நாபீர் கிலன் (Naor Gilon) எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் இந்த செயற்பாடு அதிருப்தியளிக்கிறது. அணிசேரா நாடு என  இலங்கை தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறது.  அநேக நாடுகள் இந்த அணிசேரா என்ற கொள்கையிலிருந்து விடுபட்டுள்ளது. இஸ்ரேல் மீது 350இற்கும் மேற்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி சில வார இடைவெளியில் ஈரான் ஜனாதிபதி  இலங்கை விஜயம் செய்துள்ளார்.

இதனை தனிப்பட்ட ரீதியில் எதிர்க்கிறோம். இதேவேளை, காசாவில் இடம்பெற்று வரும் போர் பலஸ்தீன மக்களுக்கு எதிரானது அல்ல. ஹமாஸ் இயக்கத்திற்கு எதிராகவே இஸ்ரேல் படையினர் போரில் ஈடுபட்டுள்ளனர்.  சிவிலியன் இழப்புக்களை வரையறுத்துக் கொள்வதற்கான சகல முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *