ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் பலத்தை காட்ட வேண்டும் : கோவிந்தன் கருணாகரன்

எங்களால் நிறுத்தப்படுகின்ற பொது வேட்பாளர் ஜனாதிபதி யாக தெரிவு செய்ய மாட்டார் சர்வதேசத்தின் சாட்சியுடன் ஒரு இணக்கத்திற்கு வந்து ஜனாதிபதி வேட்பாளருக்கா பொது வேட்பாளருக்கு வாக்களிப்பது என நாம் ஒற்றுமையுடன் முடிவெடுக்க வேண்டிய காலம் இதுவென மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 

உங்களது போராட்ட வாழ்க்கையிலும் அரசியல் வாழ்க்கையிலும் பல சந்தர்ப்பங்களை நழுவ விட்டுள்ளோம் அதில் ஒன்றுதான் இலங்கை இந்தியா ஒப்பந்தம் ஆகும். வடகிழக்கு மக்கள் சோற்றுக்காக தான் போராடினார்கள் என்பது ஜனாதிபதி வேட்பாளர் அனுரா குமார திசாநாயக்காவின் கணிப்பு , ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவேன் என எங்களை அழைத்து கூறுவதுடன் தெற்கில் உள்ள மக்களுக்கும் அதனை தெரிவித்து அவரது தேர்தல் விஞ்ஞாபனத்திளையும் அதனை கொண்டு வர வேண்டும்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எங்களது பலத்தை காட்ட வேண்டும், எங்களது உரிமைகள் பறிக்கப்படுகின்றது என்ற செய்தியை சர்வதேசத்திற்கு வழங்க வேண்டும்.

எங்களால் நிறுத்தப்படுகின்ற பொது வேட்பாளர் ஜனாதிபதியாக தெரிவு செய்ய மாட்டார் அது அனைவரும் அறிந்த விடயம் நாங்கள் வாக்களித்த ஜனாதிபதிகள் கூட எங்களுக்கு ஒன்றும் செய்யவில்லை தங்களது ஒற்றுமையை எடுத்துக்காட்ட விட்டால்

எங்களது சந்ததி கூட நிம்மதியாக வாழ முடியாது சர்வதேசத்தின் சாட்சியுடன் ஒரு இணக்கத்திற்கு வந்து ஜனாதிபதி வேட்பாளருக்கா பொது வேட்பாளருக்கு வாக்களிப்பது என நாம் ஒற்றுமையுடன் முடிவெடுக்க வேண்டிய காலம் இது என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் இன்று மட்டக்களப்பு தமிழர் விடுதலை இயக்கத்தின் மூத்த தலைவர் ஸ்ரீசபாரதத்தினத்தின் நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டு.இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

மட்டக்களப்பு வரதன் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *