அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தின் Founders Day 2024 கொழும்பு லக்ஸ்மன் கதிர் காமர் சர்வதேச தொடர்புகளுக்கான ஆராய்ச்சி நிலையத்தில் இன்று இடம்பெற்றது.
சம்மேளனத்தின் தேசிய தலைவர் எம். என். ஷாம் நவாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம். எம். சுகைர், ஜனாதிபதி சட்டத்தரணியும், முன்னாள் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ், முன்னாள் ஊடக பண்ணிப்பாளர் கலாநிதி ரங்க கலன்சூரிய ஆகியோர் அதிகளாக கலந்து கொண்டனர்.
வரவேற்புரையினை ஷாம் நவாஸ் நிகழ்தினார். சம்மேள னத்தின் இலக்கு மற்றும் கடந்த கால செயற்பாடுகளை முன்னாள் தலைவரும். சிரேஸ்ட சட்டத்தரணியுமான என். எம். சஹீட் குறிப்பிடுகையில் –
அரசியல் கட்சியாக நாம் மாறியிருந்தால் மக்களுக்கு தேவையானதை பெற்றிருக்க முடியாது.
அதற்கு மாறாக சமூகத்தின் பல்வேறுபட்ட தேவைகளையும், அதுபோன்று இளைஞர்களை தலைமைதுவத்துக்கு இட்டு செல்லும் மிகவும் முக்கியமான பணியினை சம்மேளனம் முன்னெடுக்கும் முக்கிய திட்டமாகும்.
பல கட்சிகளை பிரதி நிதித்துவப்படுத்துபவர்கள் இருந்தாலும் சம்மேளனமானது எவ்வித அரசியல் கலப்புகளும் இன்றி செயற்படுவது இதனது வெற்றிக்கு காரணமாகும்.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மக்கார். முஜிபூர் ரகுமான், வெளிநாட்டு தூதுவர்கள், காட்சிகளின் பிரதி நிதிகள்,பல் துறையாளர்கள் என பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கலந்து கொண்டனர்.
இன்றைய நிகழ்வின் முக்கிய உறைகளை சாளிய பீரிஸ், ரங்க கலன்சூரிய, எம். எம். சுகைர் ஆகியோர்களும் ஆற்றினர்.