விரிவாக்கப்பட்ட நிதி வசதி வேலைத்திட்டத்தின் கீழ் மூன்றாவது தவணையை வெளியிடுவதற்கு சர்வதேச நாணய நிதியம் இன்று (12) அனுமதியளிக்கும் என இலங்கை மத்திய வங்கி நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை மத்திய வங்கியின் உதவி ஆளுநர் கலாநிதி சந்திரநாத் அமரசேகர, “EFF திட்டத்தின் கீழ் 3 வது தவணையை இலங்கைக்கு வெளியிடுவது குறித்து IMF இன்று மாலை அறிவிக்கும் என நம்புகிறோம்” என தெரிவித்துள்ளார்.
இன்று (12) காலை கொழும்பில் இலங்கை மத்திய வங்கியினால் நடாத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கலாநிதி அமரசேகர இதனை தெரிவித்துள்மை குறிப்பிடத்தக்கது.