பொது வேட்பாளருக்கே ஆதரவு அனுரவிடம் சித்தார்த்தன்..!

ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளருக்கே ஜனநாயக் தமிழ் தேசிய கூட்டணியின் ஆதரவு நிலைப்பாடு இருக்கும் என அனுர குமார திசாநாயக்கவிடம் கூறியதாக அவருடைய சந்திப்பின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

யாழ். கந்தரோடையில் அமைந்துள்ள அவரது வாசஸ்தலத்தில் கலந்துரையாடலின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

தன்னுடைய தேர்தல் பிரசாரத்தின் ஓர் அங்கமாக என்னையும் எங்களுடைய கட்சியினை நேற்று (11) சந்தித்தார். சந்தித்த பொழுது எங்களுடைய நிலைப்பாட்டை கூறியுள்ளோம். அதிகார பரவலாக்கம் சம்பந்நமாக எதுவும் கூறாத நிலைமை உள்ளது. கடந்த வடகிழக்கு பிரிப்பு சம்மந்தமான அதிருப்தியை கூறியிருந்தேன்.

அதேபோல நியாயமான அதிகாரபரவலாக்கல் சம்மந்தமான ஒரு பிரேரணயை முன்வைப்பாராக இருந்தால் மக்கள் நிச்சயமாக பரிசிலீப்பார்கள் . காரணம் புதிய மாற்றத்திற்கான கட்சியாக பார்க்கின்ற நிலை உள்ளது.

அத்துடன் எங்களுடைய கட்சியினை பொறுத்த வரையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியாக ஐந்து கட்சிகள்சார்பாகவும் ஒரு பொதுவேட்பாளர் நிறுத்தபடுகின்ற பொழுது அதனை ஆதரிப்பதற்கான நிலைப்பாட்டினை எடுத்துள்ளோம். ஆகவே ஜனாதிபதி தேர்தல் என வருகின்ற பொழுது நாம் தமிழ் பொதுவேட்பாளருடனே நிற்போம் என தெளிவாக எடுத்து கூறியுள்ளோம் என தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *