(UTV | கொழும்பு) –
விமானம் மூலம் இலங்கைக்கு 6 கோடி பெறுமதியான குஷ் மற்றும் கொக்கெய்ன் போதைப்பொருளை இறக்குமதி செய்த கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மருதாணையில் உள்ள முன்னணி வாகன உதிரிப்பாக நிறுவனத்தை நடாத்தி வரும் சந்தேக நபர் மறைந்திருந்த நிலையில் நாவலயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் வாடகை அடிப்படையில் தங்கியிருந்த வீட்டில் சொகுசு காரொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இத்தினங்களில் அதிகமாக பேசப்படும் பிரபல மாடல் மற்றும் நடிகை பியூமி ஹன்ஸமாலி பெயரில் குறித்த கார் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
ஒரு கோடி ரூபாய் கொடுத்து அவர் அதனை கொள்வனவு செய்துள்ளதாக சந்தேக நபர் விசாரணை அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්